மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறை: இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 12 மாவட்டச் சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளைத் திறந்து வைத்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு கிலி ஏற்படுத்தும் அளவுக்கு இந்த அறைக்குள் அப்படி என்ன இருக்கிறது?

தமிழகத்தில் குற்றம் இழைத்து, சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை;r சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல் துறை சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட ஏதுவாக மத்திய சிறைகளில் நீதித்துறை நடுவர் அல்லது குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் ஒருபகுதியிலும், அவர்களைக் குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும்வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்கள் தனிச்சிறையிலும் கட்டப்பட்டு வருகின்றன.

இதுவரை அடையாளம் காட்ட வருபவர் யார் என்பதை குற்றவாளியும் பார்க்க முடியும். இந்த அச்சுறுத்தலாலேயே பலரும் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முன்வருவது இல்லை. ஆனால், தற்போதைய நடைமுறையில் குற்றவாளிகளுக்கு தன்னை அடையாளம் காட்டியது யார் என்றே தெரியாது என்பது தான் விசேஷம்.

13 மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல், பேரூரணி (தூத்துக்குடி), நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், ஆத்தூர்(சேலம்), நாகப்பட்டிணம், வேடம்பட்டு(விழுப்புரம்), தேனி, திருப்பூர், தர்மபுரி, கோபிச்செட்டிப்பாளயம் ஆகிய சிறைச்சாலைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியாவிலேயே தமிழக சிறைகளில் தான் முதன்முதலாக அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தவறு செய்த குற்றவாளிகளை பொதுமக்களும் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி துணிச்சலாக அடையாளம் காட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in