எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: விடுதியில் தங்கியிருந்த 8 பேர் பலி

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: விடுதியில் தங்கியிருந்த 8 பேர் பலி

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த 8 பேர் பலியாயினர். 5-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரூபி ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இதன் கீழ் பகுதியில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் உள்ளது. நேற்று நள்ளிரவில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் ஒரு வண்டியில் ஏற்பட்ட தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அதன் விடுதியில் தீப்பிடித்தது. இதனால் பயந்து போன விடுதியில் இருந்து குதித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சீத்தாராமன்(48) உள்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் தங்கும் விடுதியில் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in