
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இன்று நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் உள்ள லார்கிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் புல்மாவைச் சேர்ந்த அகிப் முஸ்தாக் பட் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் பணியாற்றியவர், தற்போது டிஆர்எஃப் அமைப்புடன் பணிபுரிந்தவர் என்றும் காஷ்மீர் கூடுதல் தலைமை இயக்குநர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் உள்ள சந்தைக்கு சென்று கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்டான சஞ்சய் சர்மா பிப்.26-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.