துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
துருக்கியில் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் 15 நிமிடங்களுக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஈடுபாடுகளில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் அவசரநிலை பிரகனப்படுத்தி உள்ள அந்நாட்டு அரசு, மீட்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகளும் சேதமடைந்த பகுதிகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. லெபனான், சிரியா போன்ற நாடுகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.