பெற்றோர் கண்டிப்பால் உயிரை மாய்த்த மகன்: மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலையால் அதிர்ச்சி

பெற்றோர் கண்டிப்பால் உயிரை மாய்த்த மகன்: மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலையால் அதிர்ச்சி

பள்ளிக்குச் செல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த பத்தாம் வகுப்பு மாணவனை பெற்றோர் கண்டித்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் 14 வயதான மகன் தயாநிதி. அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மகன் பள்ளிக்குச் செல்லாமல் வெளியே சுற்றி வந்தது அவனது பெற்றோருக்கு தெரிய வரவே கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நேற்று மாலை தயாநிதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, உடல் உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தேவதானபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதே போன்று நேற்று முன்தினம் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து தமிழகத்தில் நடைபெற்று வரும் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு இன்னும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in