கள்ளக்குறிச்சி அருகே 2 கிராமத்தினர் மோதல்: போலீஸ் குவிப்பு

கள்ளக்குறிச்சி அருகே 2 கிராமத்தினர் மோதல்: போலீஸ் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு கிராமத்தினர் இடையிலான முன்விரோதம் காரணமாக, மீண்டும் மோதல் எழுந்ததை அங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் சிவபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்னர் வாகன மோதல் தொடர்பான பிரச்சினை நீடித்தது. இருதரப்பில் ஆதரவாளர்கள் உடன் அவ்வப்போது சச்சரவுகள் மற்றும் மோதல் போக்குகள் எழுந்தன.

இருதரப்பினர் இடையே புகைந்து வந்த மோதல் போக்கு மற்றொரு பிரச்சினையை முன்வைத்து நேற்று வெடித்தது. இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரு கிராமங்களுக்கு இடையிலான பகையாக வளர்ந்து வருவதை அறிந்த போலீஸார் அந்த கிராமங்களில் இன்று முகாமிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இருதரப்பினர் இடையே மோதலுக்கு முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் சட்டம் ஒழுங்கு கெடாதிருக்கவும் அங்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in