அண்ணன் மகளை கேலி செய்த வாலிபர் கொலை: ஜாமீனில் வந்த சித்தப்பாவை ஓடஓட விரட்டிக்கொன்ற கும்பல்

சித்தப்பா கொலை
சித்தப்பா கொலைஅண்ணன் மகளை கேலி செய்த வாலிபர் கொலை: ஜாமீனில் வந்த சித்தப்பாவை ஓடஓட விரட்டிக்கொன்ற கும்பல்

தென்காசி மாவட்டத்தில் நண்பனை கொலை செய்த விரக்தியில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவில் அருகே தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது சகோதரனின் மகளை கேலி செய்ததாக கூறி சிவக்குமார் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில், செல்வக்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சில நாட்கள் முன்பு செல்வக்குமார் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிவகிரி நீதிமன்ற வளாகம் அருகே சென்று கொண்டிருந்த செல்வக்குமாரை கும்பல் ஆயுதங்களுடன் விரட்டியுள்ளது. இதில், அருகில் இருந்த தென்னந்தோப்பில் நுழைந்த செல்வக்குமாரை கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவக்குமாரை கொலை செய்த சம்பவத்தில் பழிக்குபழி வாங்கும் விதமாக அவரின் நண்பர்கள் செல்வக்குமாரை கொலை செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்கு தொடர்பாக சிவக்குமாரின் நண்பர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in