தென்காசியின் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தல் - செங்கோட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

தென்காசி
தென்காசி

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டுசெல்லப்பட்டு வரும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், இன்று செங்கோட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கனிம வள கடத்தலை அரங்கேற்றி வரும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சமீப காலமாக கனிம வளங்களானது கொள்ளையடித்து செல்லப்பட்டு வருகிறது. இதனால் தமிழர்களின் எதிர்கால வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும்.

பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை எனவும், தமிழர்களின் பெருமையை நிலை நாட்ட உள்ள செங்கோல் டெல்லியில் ஆட்சி செய்வதை காண அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை எனவும் கூறிய அவர், வருமானவரித்துறையினர் சோதனையை தடுத்து நிறுத்தும் அளவிற்கு திமுகவினரின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக’’ கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in