துக்க வீட்டிற்குச் சென்ற பெற்றோர்; தூளி விளையாட்டால் பறிபோன உயிர்!

உயிரிழந்த சிறுவன் லெனின்
உயிரிழந்த சிறுவன் லெனின்

வீட்டில் தனியாக விடப்பட்ட மகன் தூளி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா நந்திகோவில்பட்டியைச் சேர்ந்தவர் சேவியர்-அருள் அரசி தம்பதியினர். இவர்களுக்கு லெனின் கிரீஸ்(10) மற்றும் சந்தோஷ்(7) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சேவியர் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கிளம்பிய பொழுது, இரண்டு மகன்களும் வீட்டில் இருந்தால் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று‌. மூத்த மகனான லெனின் கிரீசை வீட்டில் விட்டுவிட்டு, இளைய மகனை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.

அப்போது, நேற்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் சேலையால் கட்டியிருந்த தூளியில் கழுத்து மாட்டிய நிலையில், லெனின் கிரீஸ் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்த தகவல் இன்று தெரிய வரவே இச்செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in