விண்ணப்பித்தவர்கள் 1.5 லட்சம் பேர்... தேர்ச்சி பெற்றவர்கள் 28,984 பேர்: நியமிக்கப்படுகிறார்கள் தற்காலிக ஆசிரியர்கள்!

விண்ணப்பித்தவர்கள் 1.5 லட்சம் பேர்... தேர்ச்சி பெற்றவர்கள் 28,984 பேர்: நியமிக்கப்படுகிறார்கள் தற்காலிக ஆசிரியர்கள்!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணி இடங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாகத் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை விலக்கக் கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தற்காலிக ஆசிரியர்களுக்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கத் தமிழக அரசு தயங்குவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஜூலை 4-ம் தேதி தொடங்கி ஜூலை 6-ம் தேதி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in