முதலில் சாமி தரிசனம்; அடுத்து கைவரிசை: கோயிலில் புகுந்த விசித்திர கொள்ளையன்

முதலில் சாமி தரிசனம்; அடுத்து கைவரிசை: கோயிலில் புகுந்த விசித்திர கொள்ளையன்

கோயிலில் புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன், சாமியை தரிசனம் செய்துவிட்டு பின்னர் உண்டியலை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ளது சுகா என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான பெண்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்து வந்ததால் கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கை அதிகமாக செலுத்தி வந்துள்ளனர். இதனை கவனித்த திருடன் அந்த கோயிலில் திருட திட்டமிட்டுள்ளான்.

நேற்றிரவு கோயிலுக்குள் சட்டை இல்லாமல் முகத்தை மறைத்தபடி வந்த முகமூடி திருடன், கோயிலின் திரை சீலையை விலக்கி உள்ளே சென்றுள்ளான். அப்போது, பெண் தெய்வம் காட்சி கொடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருடன், பின்னர் கைகூப்பி சாமியை கும்பிட்டுவிட்டு கோயிலில் இருந்த உண்டியலை திருடிச் சென்றுவிட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் இருந்த இரண்டு பெரிய மணிகள் மற்றும் காணிக்கை பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in