இரவில் வெளுத்து வாங்கிய மழை; இடிந்துவிழுந்த ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலின் மேற்கூரை: தப்பிய பக்தர்கள்!

இரவில் வெளுத்து வாங்கிய மழை; இடிந்துவிழுந்த ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலின் மேற்கூரை: தப்பிய பக்தர்கள்!

மயிலாடுதுறையில் பெய்துவரும் கனமழை காரணமாக  ஆயிரம்  ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மேற்கூரை மண்டபத்தின் பகுதி  இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே  வழுவூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றானதும் இறைவன் யானைவடிவில் வந்து அசுரனை வதம் செய்ததுமான இந்த  ஆலயத்தில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கட்டுமானங்கள்  உள்ளன.  இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்ட பல்வேறு சோழ மன்னர்களின்  கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. 

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால் ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று  மாலை பெய்த கனமழை காரணமாக கால சம்ஹார மூர்த்தி சன்னதியின் மேற்கூரை மண்டபத்தின் மேற்பகுதி  திடீரென்று இடிந்து  கீழே விழுந்தது. இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 

ஆலய விமானம் உள்ளிட்ட பிற பகுதிகள் இடிந்து சிதிலமடைவதற்கு முன் பாரம்பரியமிக்க  இந்த ஆலயத்தை அரசு கவனத்தில் எடுத்து  உடனடியாக திருப்பணிகளை தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in