வெடி வெடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: கோயில் நிர்வாகிகள் கைது

வெடி விபத்தில்  உயிரிழந்த சிறுவன்
வெடி விபத்தில் உயிரிழந்த சிறுவன்

பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகத்தின்போது வெடி விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகிகள் மற்றும் வெடி வெடித்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே அரசலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது வான வேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக வெடிகள் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (36), திருச்சி மாவட்டம் சோபனாபுரத்தைச் சரவணன் மனைவி பிரியா (21) ஆகிய இருவருக்கும் முதுகு புறத்தில் காயம் ஏற்பட்டது. அரசலூர் ராஜ்குமார் மகன் லலித் என்ற ஏழு வயது சிறுவனுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுய நினைவு இழந்த சிறுவன் லலித் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

அரசலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் லலித் மரணத்தால் அந்தப் பகுதி முழுவதும் சோகம் நிலவி வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அரும்பாவூர் போலீஸார் முறையாக உரிமமின்றி வெடி வெடித்ததாக அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன்( 27) மணிகண்டன் (34) என்ற இருவரை கைது செய்தனர். முறையான உரிமம் இல்லாதவர்களை வெடி இடிக்க அனுமதித்ததாக கோயில் நிர்வாகிகள் தேவராஜ், கனகராஜ், ராமலிங்கம், கோவிந்தசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த போய் இப்படி ஊர்க்கார்கள் கைதாகி சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் ஊர் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in