சிறுத்தை தாக்கி சிறுமி பலி; திருப்பதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது கோயில் நிர்வாகம்!

திருப்பதி
திருப்பதி

திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி பலியானதன் எதிரொலியாக பக்தர்கள் பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து, பக்தர்கள் பாதுகாப்பிற்காக நடைப்பாதையில் 100க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அலிப்பிரிவில் இருந்து திருமலை உச்சி வரை பக்தர்களுக்கு இவர்கள் பாதுகாப்பாக நிற்பார்கள். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in