இந்தியாவில் இன்னும் 5 நாட்களில் வெப்பநிலை அதிகமாக உயரும்: எச்சரிக்கும் ஐஎம்டி

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை.
இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை.இந்தியாவில் இன்னும் 5 நாட்களில் வெப்பநிலை அதிகமாக உயரும்: எச்சரிக்கும் ஐஎம்டி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த வெப்பநிலை வழக்கமாக மார்ச் மாதம் பதிவாகும். ஆனால், எதிர்பாராத விதமாக பிப்ரவரி மாதமே வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வடமேற்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று 35 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த வெப்பநிலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இது பயிர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் டெல்லி, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in