வனத்துறையினர் ரோந்தில் சிக்கிய சிறுத்தை தோல்: சந்தேகப் பையால் கைதான தற்காலிக அரசு ஊழியர்!

வனத்துறையினர் ரோந்தில் சிக்கிய சிறுத்தை தோல்: சந்தேகப் பையால் கைதான தற்காலிக அரசு ஊழியர்!

தூத்துக்குடியில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறுத்தை தோளுடன் தற்காலிக அரசு ஊழியர் சிக்கினார். இவருக்கு சிறுத்தை தோல் எப்படிக் கிடைத்தது? யார் வேட்டையாடியது என அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் சிலர் சிறுத்தை தோலை விற்பனைக்கு கொண்டுவந்திருப்பதாக சென்னை வன உயிரின குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட வனத்துறையினர் கடந்த சில தினங்களாகவே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனை பகுதியில் ஒருவர் கையில் பையுடன் நின்றார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த வன அலுவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி, அழகேசப்புரத்தை சேர்ந்த சங்கர நாராயணன்(43) என்பது தெரியவந்தது. இவர் தமிழக அரசின், இந்து சமய அறநிலையத்துறையில் தற்காலிக ஊழியராக உள்ளார். இவர் பையை சோதனை செய்த போது, அதில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் இருந்தது. அதன் தன்மையை ஆய்வு செய்த வன அதிகாரிகள், அந்த சிறுத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே இறக்கவோ, கொல்லப்படவோ செய்திருக்கலாம் எனவும், அதன் தோலின் இன்றைய சந்தை மதிப்பு 20 லட்சம் எனவும் தெரிவித்தனர். சூரிய நாராயணனுக்கு இந்த சிறுத்தை தோல் எப்படி வந்தது? அதை அவரிடம் இருந்து யார் வாங்க வருகிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in