மருத்துவமனையில் தெலங்கானா முதல்வர் அனுமதி

மருத்துவமனையில் தெலங்கானா முதல்வர் அனுமதி

உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சில நாட்களாக இடது கையில் பிரச்சினை இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்திரசேகர் ராவ் இன்று அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் எனவே கட்சியினர், மாநில மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.