தந்தை கண்முன்னே 18 வயது மகளை கடத்திய கும்பல்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தை கண்முன்னே 18 வயது மகளை கடத்திய கும்பல்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தை கண்முன்னே 18 வயது மகளை கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், முடப்பள்ளியை சேர்ந்த சந்திரய்யா என்பவர் இன்று அதிகாலை தனது மகள் ஷாலினியுடன் (18) கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் பூஜையை முடித்துவிட்டு தனது மகளுடன சந்திரய்யா வெளியே வந்துள்ளார். அப்போது, அவர்களை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்பே, சந்திரய்யாவை அந்த கும்பல் தாக்கிவிட்டு மகள் ஷாலினியை காரில் கடத்தி சென்றது.

இந்த கடத்தல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட இளம்பெண் தனது காதலனுடன் கடந்த காலங்களிலும் ஓடியுள்ளார். தற்போது அந்த பெண்ணுக்கு 18 வயதாகி விட்டதால் அவரது காதலன் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே, சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த காவல்துறையினர், கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தை கண்முன்னே மகள் கடத்தப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in