மதுரை மகளிர் கல்லூரியில் ரகளை; தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை மீது தாக்குதல்: 6 இளைஞர்கள் கைது

மதுரை மகளிர் கல்லூரியில் ரகளை; தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை மீது தாக்குதல்: 6 இளைஞர்கள் கைது

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரியில் ரகளையில் ஈடுபட்டு, மாணவியின் தந்தை மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் கடந்த 3-ம் தேதி ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி முன்பாக பல இளைஞர்கள் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஹார்ன் அடித்து கொண்டும் கத்தி கொண்டும் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததனர். மீனாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்பு முடிந்து வெளியே வந்தனர் அப்போது, அதே கல்லூரியில் பயிலும் மாணவியின் தந்தை அவர்களை பார்த்து "ஏம்பா இப்படி போறீங்க, கத்தாம போகலாம்ல" என்று கூறியுள்ளார்.

உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த அந்த இளைஞர் கூட்டம் மகளின் கண் முன்பாகவே அவரது தந்தையை ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலிலேயே நடந்ததால் மாணவிகளும் அலறியடித்து ஓடினர் கல்லூரிக்குள் ஓடினர். பட்டபகலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சாலையில் மதுரையின் மைய பகுதி கோரிப்பாளையத்தில் இவ்வாறு நடந்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அச்சம்பத்து பாலாஜி தெருவை சேர்ந்த சதீஷ்குமார், ராமமூர்த்தி, நாகப்பிரியன் என்ற நவீன், அஜித்குமார், சோமசுந்தரம், சிவஞானம் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in