சென்னையைத் தொடர்ந்து ஈரோட்டில் நடந்த பயங்கரம்; பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த வாலிபர்: ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்

சென்னையைத் தொடர்ந்து ஈரோட்டில் நடந்த பயங்கரம்; பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த வாலிபர்: ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்

ஈரோட்டில் பிளஸ் 1 மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி செய்யும் பதறவைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகரில் உள்ள பகுடுதுறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து ஒரு வாலிபர் பின் தொடர்ந்துள்ளார். அவரை விரட்டிச் சென்று மாணவியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். அவர் பிடியில் இருந்து மாணவி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த வாலிபர், கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்து பதறி போன பொதுமக்கள் ஓடி வரவும், அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ இன்று வெளியானது. இந்த வீடியோவை வைத்து சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற வாலிபர், பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த நவீன்குமார்(21) என்பது தெரிய வந்தது.

நவீன்குமார்
நவீன்குமார்

இவர் ஏற்கெனவே இந்த மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்ததுடன், காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன்குமார், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், அவர் மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரி மாணவியை வாலிபர் ஒருவர் ரயிலில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ள நிலையில் ஈரோட்டில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in