14 லட்ச ரூபாய் உயர்ரக பைக்குடன் எஸ்கேப்பான வாலிபர்: தகவல் தந்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு

14 லட்ச ரூபாய் உயர்ரக பைக்குடன் எஸ்கேப்பான வாலிபர்: தகவல் தந்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு

14 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பைக் 8 லட்ச ரூபாயுடன் வாலிபர் தலைமறைவாகியுள்ளார். அவர் குறித்த தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகர் எச்பிளாக் 2வது தெருவைச் சேர்ந்தவர் சுல்பி கராலி. தொழிபதிபரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு 14 லட்ச ரூபாயில் கவாஸகி நிஞ்சா 1000 சிசி என்ற உயரக இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து வருடமாக இந்த இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி வந்த சுல்பி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் தன்னுடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 8 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளார்.

திருடு போன பைக்.
திருடு போன பைக்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து சுல்பியைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் பைக் வாங்க விரும்புவதாக கூறியதுடன் அதற்கான ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளார். நேற்று மதியம் தொழிலதிபர் சுல்பி வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு வீட்டிற்கு வந்த மர்ம நபர் வீட்டில் இருந்த ஊழியர்களிடம் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் என கேட்டபோது ஊழியர்கள் உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் எனக் கூறியதற்கு, ஓட்ட அனுமதி கிடையாது, வேண்டுமென்றால் வீட்டின் முன்பு வைத்து ஆன் செய்து பார்த்துக் கொள்ளலாம் என சுல்பி தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபர் பைக்கை வீட்டில் இருந்து சாலையில் இறக்கிய அடுத்த நொடியில் ஆன்செய்து வாகனத்துடன்ன் மாயமானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே சுல்பிக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுல்பி பைக்குடன் தப்பி சென்ற வாலிபர் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பைக் மற்றும் அதனைத் திருடிச் சென்ற நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் சுல்பி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சென்னை அண்ணாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in