கோழிக்காக குத்திக் கொல்லப்பட்ட வாலிபர்: நத்தத்தில் நடந்த பயங்கரம்

கோழிக்காக குத்திக் கொல்லப்பட்ட வாலிபர்: நத்தத்தில் நடந்த பயங்கரம்

தான் வளர்த்த கோழியை நாய் கடித்த ஆத்திரத்தில் நாயின் உரிமையாளரைக வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விஜயன் மகன் விஷ்ணு (26). இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அதே பகுதியில் வசித்தவர் முத்தன் (38). இவர் வளர்த்த கோழியை விஷ்ணுவின் நாய் கடித்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்தன், என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த விஷ்ணுவை அவரது குடும்பத்தினர் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து முத்தனை செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு கோழியால் மனித உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in