
டெல்லியில் தனது மகளைக் காதலித்த காதலனை 2 மகன்களோடு சேர்ந்து தந்தை குத்திக்கொலை செய்யும் பதறவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி ஜாஃப்ராபாத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் டூவீலரில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்தவாலிபரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர கொலை வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் சல்மான்(25) என்பது தெரிய வந்தது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜாஃப்ராபாத்தின் சவுகான் பாங்கரில் உள்ள திரையரங்கிற்கு அருகே நேற்று மாலை டூவீலரில் நண்பரோடு சல்மான் வந்துள்ளார்.
அப்போது அவரது காதலியின் தந்தை மன்சூர், அவரது சகோதரர் மோஷின் மற்றும் மற்றொரு தம்பியான சிறுவன் ஆகியோர் சேர்ந்து வழிமறித்து சல்மானை கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் சல்மானோடு வந்தவர் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடி விட்டார். டெல்லியில் நடுரோட்டில் நடைபெற்ற இந்த கொடூர கொலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.