
மும்பையில் உள்ள தாராவியில் 20 வயது இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 70 சதவீத தீக்காயங்களுடன் இளம்பெண் உயிருக்குப் போராடி வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தாராவியில் 20 வயது இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் இன்று தீவைத்தார். இதனால் அப்பெண் அலறித் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து. அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையி ல் ஆபத்தான நிலையில் தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இளம்பெண்ணை தீவைத்து எரித்த நந்த் கிஷோர் படேல் என்பவரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக இளம்பெண்ணை அவர் எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே தாராவியில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தனது மனைவி பிரியாவை(25) அவரது கணவரான அனில் ஹீராலால் எரித்துக் கொன்றார். அத்துடன் அவரும் தீக்குளித்தார். மது குடிக்கக்கூடாது எனத் தடுத்த மனைவியை கணவர் எரித்துக் கொன்ற சம்பவம் அடங்கும் இளம் பெண் எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தாராவியில் நடந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.