ரயில் மோதி மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விபரீதம்

மகேஷ்
மகேஷ்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி மேம்பாலத்தில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி நேரு நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(27). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிகாலராக பணியாற்றி வந்தார். இன்று காலை மகேஷ் வழக்கம் போல் பணிக்குச் செல்ல வேண்டி திருத்தணியில் இருந்து ரயில் மூலம் சைதாப்பேட்டை பறக்கும் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி தண்டாவளாத்தைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் ஒன்று மோதியதில் மகேஷ் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார், மகேஷ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in