நண்பனின் கண்முன்னே கொல்லப்பட்ட வாலிபர்: வேலைக்கு சென்றபோது நடந்த பயங்கரம்

கொலை
கொலை

திருநெல்வேலியில் இன்று காலையில் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிராஜன்(26). இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவரும், இவரது நண்பர் ஒருவரும் இன்று காலையில் கட்டிட வேலைக்கு செல்வதற்காகச் சென்றனர். மதுரை பைபாஸ் சாலையில் சாய்பாபா கோயில் அருகில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் இவர்களின் காரை வழிமறித்தது. தொடர்ந்து பேச்சிராஜனின் பின்னால் இருந்த வாலிபரை எச்சரித்து விரட்டியதோடு, பேச்சிராஜனை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேச்சிராஜனின் மனைவி தங்கமாரி உள்ளிட்ட உறவினர்கள் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே பேச்சிராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேச்சிராஜன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in