டிவி சத்தத்தை குறைக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் கொடூரக் கொலை: வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

டிவி சத்தத்தை குறைக்காத பக்கத்து வீட்டு வாலிபரை குத்திக் கொலை செய்தவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி(33). இவர் கடந்த 2015-ம் ஆண்டு குடும்பத்துடன் வீட்டில் இருந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது டிவி சப்தம் அதிகமாக இருப்பதாகச் சொல்லி பக்கத்து வீட்டைச் சேர்ந்த முகமது மைதீன் நேரில்வந்து வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சரமாரியாகக் குத்தினார் மைதீன். இதில் அப்துல்காதர் ஜெய்லானி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதில் பேட்டை போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது மைதீனைக் கைது செய்து இருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கொலை வழக்கில் கைதான முகமது மைதீனுக்கு 15 ஆண்டுகள், ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார். டிவி சத்தத்தை குறைக்காததால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்போதே நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in