பைக்கி்ல் வந்த எலக்ட்ரீசியன் கொலை: சக ஊழியரை மின்சாரம் பாய்ச்சி கொன்றதால் நடந்த பழிக்குப்பழி

கொலை
கொலை

தூத்துக்குடியில் மர்மக் கும்பலால் எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸார் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவத்தில் முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால்நகரைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(60) எலக்ட்ரீசியனாக இருந்தார். இவர் நேற்று இரவு தன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று பெரியநாயகத்தை வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணையில் அதிரவைக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது. தூத்துக்குடியில் ஒரு கடையில் பெரியநாயகம் எலக்ட்ரிக் வேலை செய்துள்ளார். அந்தக் கடையில் வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அந்தக் கடையில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு பெரியநாயகம் சரியாக எலக்ட்ரிக் வேலை செய்யாதது தான் காரணம் என இறந்த வாலிபரின் உறவினர்களுக்கும், எலக்ட்ரீசியன் பெரிய நாயகத்திற்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்னும் கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in