திடீரென எழுந்த ராட்சத அலை: படகு மோதி மீனவர் பலி

திடீரென எழுந்த ராட்சத அலை: படகு மோதி மீனவர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகு மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளிவட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன்(22) மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இவர் தன் சகோதரர் எனோஸ்டன், அதேபகுதியைச் சேர்ந்த ரெவஞ்சி, கிராஸ்வின் ஆகிய நான்கு பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்துவிட்டு இவர்கள் சிங்கித்துறை கடற்கரைக்குத் திரும்பினர். படகை கடலில் இருந்து கரையை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் திடீரென ராட்சத அலை எழுந்தது. இதனால் படகு வேகமாக ஜெனோஸ்டன் மீது மோதியது. இதில் அவரது மார்புப் பகுதியில் படகு மோதி அலறித் துடித்தார். அக்கம், பக்கத்தினர் ஜெனோஸ்டனை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்செந்தூர் கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in