தொழிலில் நஷ்டம்; கடன் கொடுக்க மறுத்த வங்கிகள்: உயிரை மாய்த்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்

தொழிலில் நஷ்டம்; கடன் கொடுக்க மறுத்த வங்கிகள்: உயிரை மாய்த்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்

வங்கியில் லோன் கிடைக்காததால் வெல்டிங் பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீரெங்கநாராயணபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவனைந்தப் பெருமாள். இவரது மகன் சுந்தரலிங்கம்(27) சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்திவந்தார். வெல்டிங் பட்டறைத் தொழிலில் சுந்தரலிங்கத்திற்கு அண்மைக்காலமாக தொடர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அவர் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்தக் கடனை அடைப்பதற்காக வங்கிகளில் தொழில்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது சுந்தரலிங்கம் வீட்டில் மின்விசிறியில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் தெரிந்ததும், கூடங்குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சுந்தரலிங்கம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சுந்தரலிங்கத்தின் தற்கொலைக்கு வங்கியில் கடன் கிடைக்காதது மட்டும் தான் காரணமா? வேறு காரணங்கள் இருக்கிறதா? எனவும் கூடங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in