வாட்டிய தனிமை, கவலை: உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரனை இழந்து தவித்த தம்பி

வாட்டிய தனிமை, கவலை: உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரனை இழந்து தவித்த தம்பி

திருநெல்வேலி மாவட்டம், உவரி பகுதியில் சகோதரர் இறந்த வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கெனிஸ்டன்(28). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக உவரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

கெனிஸ்டனின் சகோதரர் சிலநாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதனால் கெனிஸ்டன் மிகவும் மனவேதனையில் இருந்தார். தன் சகோதரர் மரணம் அடைந்த பின்பு, அவர் தனிமையிலும், கவலையிலும் இருந்துள்ளார். இந்நிலையில் தான், தனிமை வாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சகோதரர் இறந்த வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in