ஓடிவந்து ரயில் மேல் ஏறிய வாலிபர்; மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலி: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கரம்

ஓடிவந்து ரயில் மேல் ஏறிய வாலிபர்; மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலி: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கரம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மேல் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் இன்று காலை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 27 வயதுடைய வாலிபர் ஒருவர் ஒடிவந்து திடீரென ரயில் மேற்கூரை மீது ஏறினார். அப்போது அருகில் இருந்த மின்னழுத்த கம்பில் உடல்பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனே ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீஸார் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி் வருகின்றனர். உயிரிழந்த வாலிபர் அணிந்திருந்த சட்டை, பேண்ட் தீயில் எரிந்ததால் அவரது பாக்கெட்டில் இருந்த அனைத்தும் எரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து போலீஸார் உயிரிழந்த நபர் யார்? எதற்காக ரயில் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in