முதலில் லாபம், அடுத்து மொத்தத்தையும் இழந்தார்: ஆன்லைன் விளையாட்டில் 15 லட்சம் பறிபோனதால் வாலிபர் தற்கொலை

முதலில் லாபம், அடுத்து மொத்தத்தையும் இழந்தார்: ஆன்லைன் விளையாட்டில் 15 லட்சம் பறிபோனதால் வாலிபர் தற்கொலை

நெல்லை மாவட்டம், பணக்குடியில் ஆன்லைன் விளையாட்டில் 15 லட்ச ரூபாய் இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பணக்குடி அருகில் உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சிவன்ராஜ்(34). இவர் அண்மையில் இணையத்தில் வந்த ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத் தன் செல்போனில் அதை டவுண்லோடு செய்தார். அவ்வப்போது விளையாடத் தொடங்கியவருக்கு முதலில் சிறு, சிறு தொகை லாபமாகக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடனே பணக்காரர் ஆகவேண்டும் என பெரிய தொகை வைத்து விளையாடி உள்ளார். ஆனால் அது அவருக்கு மொத்தமாக இழப்பை ஏற்படுத்திவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தன் நண்பர்கள், உறவினர்களிடம் பெரிய தொகைகளைக் கடன் வாங்கியும் விளையாடி உள்ளார். ஆனால் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இதனால் சிவன்ராஜிற்கு மொத்தமாக 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மைக்காலமாகவே மனம் உடைந்துக் காணப்பட்ட சிவன்ராஜ், நேற்று மாலை தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்குப் போய் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டார். வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்தவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சிவன்ராஜின் மரணம் குறித்து பணக்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in