பப்புக்கு வரும் இளைஞர்களுக்கு குறி; சோதனையில் சிக்கிய வாலிபர்: 1,500 போதை மாத்திரை பறிமுதல்

பப்புக்கு வரும் இளைஞர்களுக்கு குறி; சோதனையில் சிக்கிய வாலிபர்: 1,500 போதை மாத்திரை பறிமுதல்

ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் சாலைகளில் பப்புக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்து 1,500 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை அடையாறு திரு.வி.க பாலம் அருகே அபிராமபுரம் போலீஸார் நேற்றிரவு வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரது பையை வாங்கி சோதனையிட்டனர். அதில், 1,500 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போதை மாத்திரைகள் குறித்து கேட்டபோது வாலிபர் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக மழுப்பியுள்ளார்.

பின்னர் வாலிபரை அபிராமபுரம் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்ற நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். ஆழ்வார்பேட்டை பீமன்னா கார்டன் பகுதியைச் சேர்ந்த கோகுல் (எ) மதன் என்பதும், ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் உள்ள பப்புகளுக்கு வரும் இளைஞர்களுக்கு தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும், ஏற்கெனவே இவர் மீது போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதனை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in