35 துண்டுகளாக வெட்டிக் காட்டில் வீசுவேன்: திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது

35 துண்டுகளாக வெட்டிக் காட்டில் வீசுவேன்: திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் 35 துண்டுகளாக வெட்டிக் காட்டில் வீசுவேன் என பள்ளி மாணவிக்கு வாலிபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். அவரைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது வாலிபரின் உறவினர் தடி, கம்பிகளால் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ஷமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஃபைஸ்(21) என்ற வாலிபர், மாணவிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் போது பின்னால் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளார்.

நவ.25-ம் தேதி மாணவியின் வீட்டிற்குச் சென்ற முகமது ஃபைஸ், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் 35 துண்டுகளாக வெட்டிக் காட்டில் வீசிவிடுவேன் என்று மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். ஆனால், உறவினர்கள் வலியுறுத்தியால் மீண்டும் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி சென்ற மாணவியைத் தடுத்து நிறுத்தி கிண்டல் செய்து முகமது ஃபைஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர், போலீஸில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் பின் முகமது ஃபைஸ் வீட்டிற்கு போலீஸார் நேற்று சென்றனர். ஆனால், அவர்களை முகமது ஃபைஸ் குடும்பத்தார் தடி, கம்பிகளைக் கொண்டு தாக்கினர். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின் மற்ற காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முகமது ஃபைஸை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கான்பூர் காவல்துறை உதவி ஆணையர் அபிஷேக் குமார் பாண்டே கூறியுள்ளார். போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த சம்பவம் கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in