பகீர்... நகைகளுக்காக தாத்தா, பாட்டியைக் கொன்ற பேரன்... விற்கும் போது மடக்கிப் பிடித்த போலீஸார்!

இரட்டைக்கொலை செய்த வாலிபர் கைது
இரட்டைக்கொலை செய்த வாலிபர் கைதுகேரளாவில் தாத்தா, பாட்டி கொலை... கர்நாடகாவிற்கு எஸ்கேப்பான வாலிபர் சிக்கியது எப்படி?

கேரளாவில் தாத்தா, பாட்டியைக் கொலைச் செய்து விட்டு அவர்களது நகைகளைத் திருடிக் கொண்டு கர்நாடகாவில் விற்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் காரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். சில நகைக்கடைகளுக்குள் நுழைந்து அவர் நகைகளையும் விற்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயர் அகமது அக்மல்(27) என்பதும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் அவரது தாத்தா, பாட்டியை அக்மல் கொலைச் செய்து விட்டு அவர்களது வீட்டில் இருந்த நகைகளைத் திருடிக் கொண்டு மங்களூருவிற்கு தப்பி நேற்று வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து தங்கமுத்து செயின், சிறிய பதக்கத்துடன் கூடிய ஒரு செயின், மூன்று ஜோடி காதணிகள், ஐந்து மோதிரங்கள், 2 வளையல்கள், பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருவரைக் கொலை செய்து விட்டு நகைகளைத் திருடிக் கொண்டு கர்நாடகா தப்பி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in