பூங்காவில் நாயை பலாத்காரம் செய்யும் வாலிபர்: வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி

வைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோபூங்காவில் நாயை பலாத்காரம் செய்யும் வாலிபர்: வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லியில் தெருநாயை பலாத்காரம் செய்த வாலிபருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வாலிபர் நாயை பலாத்காரம் செய்யும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்காவில் தெருநாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத அந்த வாலிபர் பூங்காவில் நாயை பலாத்காரம் செய்யும் காட்சியை ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாயை பலாத்காரம் செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் விலங்குகள் சட்டம் பிரிவு 377(11) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் வீடியோவை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in