ஃபேஸ்புக்கில் பிரண்ட் ரெக்யூஸ்ட்... ஏற்க மறுத்த சிறுமி: வீடு புகுந்து கொன்ற இளைஞர்

ஃபேஸ்புக்கில் பிரண்ட் ரெக்யூஸ்ட்... ஏற்க மறுத்த சிறுமி: வீடு புகுந்து கொன்ற இளைஞர்

ஃபேஸ்புக்கில் தனது நட்புக் கோரிக்கையை( friend request) ஏற்காததால் ஆவேசத்தில் இளைஞர் ஒருவர், 16 வயது சிறுமியை குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முசாபர் நகர் நெடுஞ்சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லா போஹ்ரா கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் திருமண அட்டையுடன் ரவி என்பவர் வந்தார். அந்த திருமண அட்டையை வாங்க ரவியை நோக்கி அந்த சிறுமி வந்தபோது, ​​அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியைக் குத்தினார். இதனை தடுக்க வந்த சிறுமியின் தாயார் சுனிதாவையும் கடுமையாக தாக்கினார். அதன் பின்னர், ரவி தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

பரிதாபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்புப் பணியாளராக பணிபுரியும் சிறுமியின் தந்தை தேஜ்வீர் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முசாபர் நகர் நெடுஞ்சாலை காவல் நிலைய அதிகாரி அஜய் கௌஷால் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ரவி முசாபாநகரில் வசிப்பவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கையை ஏற்காததால் ரவி தனது மகளை கொலை செய்ததாக தேஜ்வீர் தனது புகாரில் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் சுனிதா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ரவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in