நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய 'சுள்ளான்': 294 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

கோவை மத்தியச்சிறை
கோவை மத்தியச்சிறைநன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய 'சுள்ளான்': 294 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

கோவையில் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய வாலிபரை 294 நாட்கள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், குற்றவழக்குகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நன்னடத்தை பிணைய பத்திரம் முறை பின்பற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூர் உட்கோட்டம் வடவள்ளி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தீபக் என்ற சுள்ளான் (21) என்பவருக்கு கடந்த 14.11.2022-ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு பேரூர் நிர்வாக துறை நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணைய பத்திரம் முறை பின்பற்றப்பட்டது. இந்த

நன்னடத்தை பிணைய பத்திரம் விதிகளை மீறினால் மீண்டும் சிறையில் சம்பந்தப்பட்டவர்கள் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுள்ளான் பிணைய பத்திரத்தை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை 16.12.2022 அன்று அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இந்தநிலையில் பேரூர் நிர்வாகத் துறை நடுவர் முன் சுள்ளானை ஆஜர்படுத்தி பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக பிணைய பத்திரத்தில் மீதமுள்ள 294 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் சுள்ளான் இன்று அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in