பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டிய  தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
ஆசிரியருக்கு கேக் ஊட்டும் தலைமையாசிரியை

தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியரும், அவருக்கு கேக் ஊட்டிவிட்ட பெண் தலைமை ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் க.மணிகண்டனுக்கு (49) கடந்த 16-ம் தேதியன்று பிறந்த நாள். தனது பிறந்தநாளை பள்ளியில் கொண்டாட விரும்பிய மணிகண்டன், பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியர் சித்ராதேவி (59), சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்.

அப்போது மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ராதேவி கேக் ஊட்டி விட்டார். இந்த புகைப்படங்களை மணிகண்டன் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இப்புகைப்படங்கள் அனைத்து ஆசிரியர் குழுக்களிலும் பகிரப்பட்டது. பள்ளி வளாகங்களில் மாணவர்களால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ஆசிரியருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதுடன் ஆண் ஆசிரியருக்கு, பெண் தலைமை ஆசிரியை கேக் ஊட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரையும் நேற்று (ஜூன் 18-ம் தேதி) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in