`எனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம்'- அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த மாணவன்

`எனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம்'- அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த மாணவன்

``எனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம். என்னை தினமும் அடித்து துன்புறுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று தற்கொலைக்கு முன்பு மாணவன் பேசிய வீடியோ பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சேகர் (46). இவரது மூத்த மகன் பார்த்தசாரதி (18). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மகன்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்து பார்த்தசாரதி வீட்டிற்கு வந்த போது அங்கு தம்பி பாரதிசெல்வா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், என்னை பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இந்த உலகத்தை பிடிக்கவில்லை. தனது சாவுக்கு பெற்றோர் காரணம் இல்லை. முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவன் வீடியோவை கைப்பற்றி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in