அரசு பள்ளியில் மது பார்ட்டி, கறி விருந்து நடத்திய ஆசிரியர்: வீடியோ வைரலானதால் கல்வித்துறை அதிரடி

அரசு பள்ளியில் மது பார்ட்டி, கறி விருந்து நடத்திய ஆசிரியர்: வீடியோ வைரலானதால் கல்வித்துறை அதிரடி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது மற்றும் கறி விருந்து நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் போட்டோ கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவு உணவு விருந்து நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " இந்த பள்ளியின் ஆசிரியர் குடித்து விட்டு கும்மாளம் போட்டதை வீடியோ எடுத்த கிராமவாசியை ஆசிரியர் தாக்கினார். அந்த ஆசிரியர் இது போன்ற விருந்துகளைத் தவறாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மது விருந்து தொடர்பான வீடியோ வெளியானதால் சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் நேற்று இடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் அசோக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், " ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்ற அறிக்கையின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பின் பிறகு மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும் " என்று அவர் கூறினார். அரசு பள்ளியில் மது மற்றும் கறி விருந்து நடைபெற்ற சம்பவம் மத்தியப் பிரதேச மாநில கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in