விளையாடிய குழந்தை திடீர் மாயம்... பிளே ஸ்கூலில் 9 மாத பிள்ளையை இழந்த ஆசிரியை: சென்னையில் நடந்த சோகம்

விளையாடிய குழந்தை திடீர் மாயம்... பிளே ஸ்கூலில் 9 மாத பிள்ளையை இழந்த ஆசிரியை: சென்னையில் நடந்த சோகம்

பல்லாவரத்தில் பிளே ஸ்கூல் கழிவறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 9 மாத பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ(24). இவருக்கு திருமணமாகி 9 மாதத்தில் கவிஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ஏஞ்சலின் பல்லாவரம் கோபாலன் தெருவில் உள்ள தனியார் பிளே ஸ்கூலில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பணிக்கு சேர்ந்து 3 நாட்களே ஆன நிலையில் ஏஞ்சலின் தினமும் பள்ளிக்கு செல்லும்போது தனது 9 மாத குழந்தை கவிஸ்ரீயை தன்னுடன் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இன்று வழக்கம் போல் ஏஞ்சலின் தனது மகளை அழைத்து சென்றார். மதியம் பள்ளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கவிஸ்ரீ திடீரென காணாமல் போனதால் பதற்றமடைந்த ஏஞ்சலின் பள்ளியை சுற்றி தேடிவந்த போது பள்ளி கழிவறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை கவிஸ்ரீ விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்த குழந்தையை மீட்டு உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்துவிட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை கவிஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பல்லாவரம் போலீஸபர் குழந்தை கவிஸ்ரீ உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி்வருகின்றனர்.

பிளே ஸ்கூல் கழிவறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in