பாடம் நடத்தும் போது பாட்டுக்கேட்டு ரசித்த மாணவன்: ஆத்திரத்தில் அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

பாடம் நடத்தும் போது பாட்டுக்கேட்டு ரசித்த மாணவன்: ஆத்திரத்தில் அடித்து உதைத்த  ஆசிரியர் சஸ்பெண்ட்

ஆந்திராவில் பள்ளி வகுப்பறையில் பாட்டுக்கேட்ட மாணவனை அடித்து உதைத்துடன் ஆசிரியர், எட்டி உதைத்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பென்ஸ் சர்கிள் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல், இயர்போனை காதில் மாட்டிப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த ஆசிரியர், ஆத்திரமடைந்து அந்த மாணவனை கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார். அத்துடன் கீழே தள்ளி காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அந்த வகுப்பறையில் இருந்த இன்னொரு மாணவன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மாணவனை ஆசிரியர் எப்படி இப்படி மிருகத்தனமாக தாக்கலாம் என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in