கல்லூரிப் பேருந்தில் மோதிக்கொண்ட ஆசிரியை- மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ

கல்லூரிப் பேருந்தில் மோதிக்கொண்ட ஆசிரியை- மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் ஆசிரியையும், மாணவியும் மோதி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி பேருந்துகளில் மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி முடிந்த பின்பு மாணவி, மாணவிகள் பேருந்தில் ஏறினர். அப்போது ஆசிரியை ஒருவரும் பேருந்தில் ஏறி இருக்கிறார். அவரிடம் பேருந்து இருந்த மாணவி ஒருவர் அடையாள அட்டை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் மாணவியை ஆசிரியை அடித்துள்ளார். பதிலுக்கு மாணவியும் ஆசிரியையை அடித்துள்ளார். அப்பாது அங்கிருந்த சக மாணவ- மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர், பின்னர் இருவரையும் அவர்கள் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் மாணவி மீதும் ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in