கையெழுத்து சரியில்லையென குச்சியால் விளாசிய ஆசிரியர்: 2-ம் வகுப்பு மாணவி பார்வை பாதிப்பு

கையெழுத்து சரியில்லையென குச்சியால் விளாசிய ஆசிரியர்: 2-ம் வகுப்பு மாணவி பார்வை பாதிப்பு

கையெழுத்து மோசமாக இருந்ததாகக்கூறி 2-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் குத்தியால் அடித்து உதைத்தார். இதில் மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நொய்டா அருகே உள்ள கஸ்னாவில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் அமித் கட்டியார். இரண்டாம் வகுப்பு மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுக்களை அமித் கட்டியார் நேற்று சரிபார்த்தார்.

அப்போது ஷாலு என்ற மாணவியின் கையெழுத்து மோசமான நிலையில் இருந்தது. இதனால், அந்த மாணவியை அமித் கட்டியார் குச்சியால் அடித்து உதைத்தார். இதில் மாணவியின் இடது கண்ணுக்குக் கீழ் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முகம் வீங்கியது. அத்துடன் பார்வை பாதிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த மாணவியின் நிலையைப் பார்த்த அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் அமித் கட்டியாரை போலீஸார் இன்று கைது செய்தனர். ஆசிரியர் அடித்ததில் மாணவி பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in