மாணவனை ஏன் அடித்தீர்கள்? - ஆசிரியர், தலைமை ஆசிரியரை கைது செய்தது போலீஸ்!

கைது
கைது

ராஜஸ்தான் மாநிலம் ரீங்கஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒழுங்காக வரிசையில் நிற்காத 12ம் வகுப்பு மாணவரை அடித்ததற்காக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரீங்கஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் போது, ​​12 ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் டெத்வா வரிசையில் ஒழுங்காக நிற்காமல் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆசிரியர் பிரதீப் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதற்கு மாணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், தலைமை ஆசிரியர் சாகர்மால் மற்றும் பிரதீப் ஆகியோர் அவரை அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் புதன்கிழமை நடந்ததாகவும், அன்று இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், பள்ளியின் மற்றொரு ஆசிரியர், அன்றைய தினம் தன்னை அந்த மாணவன் அறைந்ததாகக் கூறி, மாணவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in