திருமணத்தை விரும்பாத ஆசிரியை; வற்புறுத்திய உறவுகள்: தாய் இறந்த 3 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை திருமணத்தை விரும்பாத ஆசிரியை; வற்புறுத்திய உறவுகள்: தாய் இறந்த 3 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு

தாய் இறந்த சோகத்தில் இருந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்பாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது இரண்டாவது மகள் முனீஸ்வரி(26). இவர் திருத்தங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைசெய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலமின்மையால் முனீஸ்வரியின் தாயார் உயிர் இழந்தார். அப்போது முதலே முனீஸ்வரி சோகத்திலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஆறுமுகசாமி உள்ளிட்டக் குடும்பத்தினர் முனீஸ்வரியின் மன வருத்தம் திருமணம் செய்து வைத்தால் திசைமாறும் என முடிவுசெய்தனர். அதற்காக வரன் பார்த்து ஏற்பாடும் செய்ய தயார் ஆகினர். ஆனால் முனீஸ்வரி தாய் இறந்து 3 மாதமே ஆவதால் தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் எனத் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் அவர் வீட்டில் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் முனீஸ்வரி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தங்கல் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் இறந்த சோகத்தில் இருந்தவருக்கு, வரன் பார்த்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in