
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவனை அடித்ததற்காக தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மாணவனின் பெற்றோர் அந்த ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.
மார்ச் 14 அன்று, கழிவறையிலிருந்து தாமதமாகத் திரும்பியதற்காக தனியார் பள்ளி ஆசிரியர், 14 வயதான அந்த சிறுவனை அறைந்துள்ளார். அவர் அந்த மாணவனை முதுகில் அடித்து, காதுகளைப் பிடித்து இழுத்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் சிறார் நீதிச் சட்டம் மற்றும் கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வஷிந்த் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு வலி இருப்பதாகவும், கண்களுக்கு அருகில் வீக்கம் இருப்பதாகவும், ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.