மாணவரிடம் தவறாக நடந்த ஆசிரியரிடம் பல லட்சம் பறித்த கும்பல்!

ராஜதுரைலிங்கம்
ராஜதுரைலிங்கம் மாணவரிடம் தவறாக நடந்த ஆசிரியரிடம் பல லட்சம் பறித்த கும்பல்!

மாணவர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற புகாரில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜதுரைலிங்கம்(43). பள்ளி மாணவர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸார் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்த ஆசிரியரிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் தொடர்பாக சிலர் அவரிடம் பல லட்சம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறிக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in